Apple Store Vs Google Play Store


உலகம் முழுவதும் திறன்பேசிகளின் இயங்குதளம் (OS) என்றால் இரு பெரு நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் Android மட்டுமே! இதைத்தாண்டி இருக்கலாம் ஆனால், அவை துக்கடா அரசியல் கட்சிகள் மாதிரி தான். Image Credit – https://www.technewsinc.com

ஆப்பிள்

ஆப்பிள் வசதியானவர்களைக் குறி வைத்துத் தயாரிக்கப்படும் சாதனங்கள். இதில் வன்பொருள் மென்பொருள் தரம் அபாரம். தன்னுடைய வாடிக்கையாளர்கள் குறைவு என்றாலும், தரத்தில் எந்தச் சமரசமும் செய்து கொண்டதில்லை.

விலையைப் பற்றிக் கவலைப்படாமல் தரத்தை பற்றி மட்டுமே நினைப்பவர்கள், அதிகச் செலவு செய்ய நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவன திறன்பேசி தான் வாங்குகிறார்கள்.

Android

Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகச் செலவு செய்ய நினைக்காதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள்.

இதனால் ஆப்பிள் திறன்பேசியை அனைவரும் வெறுப்பவர்கள் என்ற அர்த்தமில்லை, விலை குறைத்து கிடைத்தால் வாங்க தயாராக இருப்பவர்களே!

ஆனால், தரம் என்பதையும் தாண்டி எளிமையான பயன்பாடு, அதையொட்டிய வசதிகள், பல வகை திறன்பேசிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆப்பிள் திறன்பேசிகளைக் கொடுத்தாலும் விரும்பமாட்டார்கள்.

எனவே, இரு இயங்கு தளத்துக்கும் தனித்தன்மை என்றுள்ளது.

ஆப்பிள் நிறுவன திறன்பேசி விலைக்குச் சமமாக இருக்கும் “Google Pixel” Android திறன்பேசிகளை வாங்குபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

சராசரி

இருப்பினும் சராசரியாகப் பார்க்கும் போது ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் செலவு செய்யத் தயங்காதவர்களாகவும், Android திறன்பேசி பயன்படுத்துபவர்கள் செலவு செய்ய யோசிப்பவர்களாகவும் உள்ளனர்.

எனவே குறைவான பயனாளர்கள் சதவீதத்தை வைத்து இருந்தாலும் ஆப்பிள் நிறுவனமே செயலிகள் மூலமாக அதிகம் சம்பாதிக்கிறது. அதிகளவில் பயனாளர்கள் வைத்து இருந்தாலும் ஆப்பிளுடன் Android போட்டி போட முடியவில்லை.

வருமான சதவீதம்

வருமானம் எந்த அளவில் உள்ளது என்பதை விளக்கும் படங்களே இவை! Image Credit https://techcrunch.com

இவற்றைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், செயலிகளின் தரவிறக்கம் அதிகமிருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் பாதி தான் Android பெறுகிறது.

உதாரணத்துக்கு Android பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இலவச செயலியை தான் தரவிறக்கம் செய்வார்கள். பணம் கொடுத்து வாங்குபவர்கள் குறைவு.

நான் Android பயன்படுத்துகிறேன் ஆனால், இதுவரை பணம் கொடுத்து செயலி வாங்கியதில்லை. Google Rewards மூலமாகக் கிடைக்கும் பணத்தின் மூலமே நான் செயலிகளை வாங்கி இருக்கிறேன். என்னைப் போன்றவர்கள் தான் அதிகம்.

செயலிகள் மூலம் மிகப்பெரிய வருமானம் கிடைக்கும் நாடான சீனாவில் Apple Store உள்ளது ஆனால், Android Play Store க்கு தடையுள்ளது.

இருப்பினும் சீனா வருமானத்தைக் கழித்தாலும் 30% வருமானம் அதிகளவில் ஆப்பிள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல்?